மறந்திடாதீங்க... நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

Maalaimalar

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் நாளை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு சுகாதாரத் துறை ஏற்பாடு.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.

தனியார் மருத்துவமனைகள், பேருந்து, ரெயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களிலும் வழங்க அரசு ஏற்பாடு.

போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் குழுக்கள் அமைப்பு.

ஏற்கெனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.