Maalaimalar
இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்நாட்டுப் பறவைகளான பச்சைக்கிளி மற்றும் பஞ்சவர்ணக் கிளிகளை வளர்க்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கிளிகளை வீட்டில் வளர்க்கலாம். அவற்றுள் சில..
ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இவை சிறியவை, வண்ணமயமானவை மற்றும் பராமரிக்க எளிதானவை.
தலையில் கொண்டை போன்ற அமைப்பைக் கொண்ட இவை, மிக அமைதியானவை மற்றும் மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடியவை.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த சிறிய கிளிகள் எப்போதும் ஜோடியாக மகிழ்ச்சியாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாகவும் இருக்கும்.
கிரீன் சீக்டு கானூர் மற்றும் சன் கானூர் போன்ற கிளி வகைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
உலகின் மிக புத்திசாலித்தனமான பறவைகளில் ஒன்று; மனிதர்கள் பேசுவதை அப்படியே பேசும் திறன் கொண்டது.