Maalaimalar
பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய்.
தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது , சொந்த தொகுதி பெரம்பூருக்கான ₹1,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட புனரமைப்புத் திட்டத்தை வெளியிட்டார்.
புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும், இ-சேவை மையத்தையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
பெரம்பூர் குடியிருப்பாளர்கள், உள்கட்டமைப்புப் புகார்களை நேரடியாகச் சமர்ப்பிக்கவும் கண்காணிக்கவும் ஒரு பிரத்யேக மொபைல் செயலியும், குறைதீர்ப்பு இணையதளமும் (tvkcm.com) தொடங்கப்பட்டன.
எம்.கே.பி. நகர், சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக்கடையில் தமிழ்நாடு முழுவதும் 73,000 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களை வழங்கினார்.
வியாசர்பாடியில் செயல்பட்டு வரும் மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பேருந்து மின்னேற்றச் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.