Maalaimalar
பாரிஸ் ஃபேஷன் வீக் 2026 மேடையில் தனது கம்பீரமான ராயல் லுக்கால் ஒட்டுமொத்த சர்வதேச அரங்கையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்!
சிரிய நாட்டு ஆடை வடிவமைப்பாளர் 'யாரா ஷூமேக்கர்' பிரத்யேகமாக வடிவமைத்த 'Midnight-black Velvet' கவுனில் தேவதையாகக் காட்சியளித்தார்.
ஃபேஷன் ஷோவின் இறுதிப் பகுதியில், உலகளாவிய தூதர்கள் மற்றும் சக மாடல்களுடன் இணைந்து மேடையில் உற்சாகமாக நடனமாடி அசத்தினார்.
பாரிஸ் ஃபேஷன் வீக் மேடையில் ஐஸ்வர்யா ராயின் இந்த ராயல் ரேம்ப் வாக் மற்றும் நடன வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
50 வயதிலும் தனது வசீகரத்தாலும், கம்பீரத்தாலும் உலக மேடையில் இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளார் ஐஸ்வர்யா ராய் பச்சன்!
லோரியல் பாரிஸ் பிராண்டின் சர்வதேச முகமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறார்.
இந்த ஆடம்பரமான நள்ளிரவு கருப்பு கவுனை பிரத்யேகமாக வடிவமைக்க ஆடை வடிவமைப்புக் குழுவினர் 300 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்துள்ளனர்.
பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான 'Stand Up Against Street Harassment' விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக இந்த ரேம்ப் வாக் நடைபெற்றது.