குழந்தைகள் விரும்பும் பெற்றோரா நீங்கள்...

Maalaimalar

குழந்தைகள் எப்போதும் பெற்றோர் விருப்பப்படியே நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது.

குழந்தைகள் சில நேரங்களில் பிடிக்காத விஷயங்களுக்கு அழுவார்கள். அடம் பிடிப்பார்கள்.

குழந்தையின் உணர்வுகளை புரிந்துகொண்டு எது சரியான நடத்தை என்பதை பொறுமையாக பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

குழந்தை தவறு செய்தால் அந்த தவறை சுட்டிக்காட்டுங்கள். அடுத்த முறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுங்கள்.

சில குழந்தைகள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம். அதனால், மற்ற குழந்தைகளை விட பின்தங்கி விட்டார்கள் என முடிவு செய்யாதீர்கள்.

குழந்தை சாப்பிடும்போது, விளையாடும்போது, குடும்பத்தினருடன் இருக்கும்போது என எல்லா நேரங்களிலும் செல்போன் பயன்படுத்துவது நல்ல பழக்கம் அல்ல.

குழந்தைகளை அன்புடன் அணுகுபவர்கள், அவர்கள் சொல்வதை கேட்கத்தயாராக இருக்கும் பெற்றோரையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.