Oscars 2025 - சிறந்த படத்தொகுப்பு & திரைக்கதைக்கான விருதை தட்டி தூக்கிய `Anora'

Rebecca

97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
கெனைன் ஓ பிரைன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை எ ரியல் பெயின் ( A Real pain) படத்திற்காக கீரன் கல்கின் ( Kieran Culkin) வென்றார்.
சிறந்த அனிமேடட் படத்திற்கான விருதை ஃப்லோ {FLOW} திரைப்படம் வென்றது. இப்படத்தை Gints Zilbalodis இயக்கியது.
சிறந்த அனிமேடட் குறும்படத்திற்கான விருதை IN THE SHADOW OF THE CYPRESS குறும்படம் வென்றுள்ளது. இப்படத்தை Shirin Sohani and Hossein Molayemi இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை Wicked திரைப்படத்திற்காக Paul Tazewell வென்றார். இவரே ஆஸ்கர் விருது வெல்லும் முதல் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான விருதை அனோரா (Anora) திரைப்படம் வென்றது. சியான் பேகர் Sean Baker வென்றார்.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கான்கிலேவ் (CONCLAVE) திரைப்படத்திற்காக Peter Straughan வென்றார்.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரதிற்கான விருது THE SUBSTANCE திரைப்படத்திற்காக PIERRE-OLIVIER PERSIN, STÉPHANIE GUILLON AND MARILYNE SCARSELLI வென்றார்கள்.
சிறந்த துணை நடிகைக்கான விருதை EMILIA PÉREZ படத்திற்காக Zoe Saldaña வென்றார்.