Maalaimalar
ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இயற்கைக்கும், விவசாயத்திற்கும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருவிழாவாகவும் ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது.
ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓண சத்யா விருந்தில் 24 முதல் 64 வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டு, கடவுளுக்கு படைக்கப்படும்.
அரிசி சாதம், பருப்பு, சாம்பார், அவியல், பச்சடி, ரசம், மோர், புளிச்சேரி, ஊறுகாய், நெய், அப்பளம், பாயசம் போன்ற உணவுகள் ஓண சத்யாவில் இடம்பெறுகின்றன.
ஓண சத்யா, படகுப் போட்டி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், யானை ஊர்வலம், ஓண ஊஞ்சல் என கேரளம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.