Maalaimalar
பயணத்தை தொடங்கும் போது நம்மை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
காகம் இன்னொரு காகத்திற்கு உணவை பகிர்வதை பார்ப்பது இனிமையான செயல் நடக்கும் என்பதை குறிக்கும்.
காகம் நம் வீட்டு வாயிலில் ஓயாது கரைந்தால், யாரோ விருந்தினர் வரப்போவதாக அர்த்தம்.
அசாதாரணமாக சுற்றி சுற்றி பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து வரப்போவதை குறிக்கும்.
நம் உடல் மீது காகம் தன் சிறகால் தீண்டினால், மரணம் அளவுக்கு துன்பம் நேரிடலாமாம்.