விளக்கு ஏற்றும் எண்ணெய்களும் அதன் பலன்களும்

Maalaimalar

பசு நெய்: வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வ வளம் நிலைத்திருக்க உதவும். எதை நினைத்து விளக்கு ஏற்றுகிறோமோ அந்த காரியம் நிறைவேறும்.

நல்லெண்ணெய்: நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் பீடைகளை நீக்கி, லட்சுமி கடாட்சத்தைத் தரும். சனி தோஷம் விலகும்.

இலுப்பை எண்ணெய்: குபேரனின் அருளைப் பெற்றுத் தரும். சகல காரியத்திலும் வெற்றியை பெற்று தரும்.

விளக்கு எண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்): புகழ், மதிப்பு, வாழ்க்கையில் வசதி உண்டாகும்.

வேப்ப எண்ணெய்: கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும்.

தேங்காய் எண்ணெய்: விநாயகரின் அருளை பெறலாம். வசீகரம் கூடும்.

மூன்று எண்ணெய்: வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் கலந்து தீபம் ஏற்றுவதன் பலனாக வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.

ஐந்து எண்ணெய்: 5 எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால், இறையருளும் குலதெய்வத்தின் அருளும் கிடைக்கும்.