சத்துக்கள் நிறைந்த சோளம் தோசை

மாலை மலர்

தேவையானவை:- சோளம்- 2 கப், உளுந்து- 1/2 கப், வெந்தயம்- 1 தேக்கரண்டி, உப்பு- தேவைக்கு

செய்முறை

சோளத்தை கழுவி, ஐந்து மணி நேரம் ஊறவையுங்கள். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் உளுந்தையும், வெந்தயத்தையும் சேர்த்து நன்கு அரையுங்கள். பின்பு சோளத்தை அரைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டுவித மாவுகளையும் சேர்த்து, உப்பும் கலந்து ஐந்து மணி நேரம் வைத்திருங்கள். பின்பு தோவை வார்த்து சுவையுங்கள்.