நிவின்பாலி படத்தின் புதிய அப்டேட்... உற்சாகத்தில் ரசிகர்கள்

Santhya

இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்
இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படக்குழு 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஜனவரி 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.