'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

undefined

இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் உலகம் முழுவதும் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ.3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.