Maalaimalar
6-ம் நாளான அன்னை இந்திராணியாகவோ அல்லது கஜலட்சுமியாகவோ அலங்கரிக்கப்படுகிறாள்.
தேவர்களின் தலைவனான இந்திரனின் சக்தியாகவும், செல்வத்தின் உச்சமாகவும் அன்னை போற்றப்படுகிறாள்.
அன்னையை “ஓம் இந்திராண்யை நமஹ அல்லது ஓம் கஜலட்சுமியை நமஹ” என்று ஜபிக்கலாம்.
செம்பருத்தி, சாமந்தி மலர்களைச் சமர்ப்பிக்கலாம்.
தேங்காய் சாதம், கேசரி அல்லது இனிப்பு வகைகளை நைவேத்யமாக படைக்கலாம்.
மனிதனுக்குத் தேவையான நற்பெயர், புகழ், சமூகத்தில் அந்தஸ்து ஆகியவற்றை வழங்கி கர்வம் இல்லாத வளமான வாழ்வை அருளும் வடிவம் கஜலட்சுமி.