நவராத்திரி 4-ஆம் நாள்: அன்னை கூஷ்மாண்டா தேவி வழிபாடு!

Maalaimalar

நவராத்திரியின் நான்காம் நாளான இன்று பிரபஞ்சத்தை உருவாக்கிய அன்னை கூஷ்மாண்டா தேவி கோலாகலமாக வழிபடப்படுகிறாள்.

இன்று தேவிக்கு செவ்வரளி மற்றும் மல்லிகை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது நற்பலன்களை அள்ளித்தரும்.

சூரிய மண்டலத்தின் மையப்பகுதியில் வசிக்கும் பேராற்றல் கொண்ட ஒரே தெய்வம் அன்னை கூஷ்மாண்டா தேவியாகும்.

அன்னை கூஷ்மாண்டாவை சரணடைந்து வாழ்வில் என்றும் குறையாத ஆயுள், ஆரோக்கியம் மற்றும் புகழைப் பெற்று மகிழ்வோம்.

நான்காம் நாளான இன்று அன்னைக்கு மிகவும் பிடித்தமான ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்து வழிபடுவது மங்களகரமானதாகும்.

தனது மென்னகையாலேயே இந்த அகில அண்டத்தையும் படைத்த மகாசக்தியாக அன்னை கூஷ்மாண்டா தேவி போற்றப்படுகிறாள்.

இன்று அம்பிகைக்கு நைவேத்தியமாக சுவையான கதம்ப சாதம் அல்லது சுண்டல் படைத்து வழிபடுவது விசேஷமானதாகும்.

இன்று அன்னைக்கு சாம்பல் பூசணிக்காயை பலியாகவோ அல்லது தானமாகவோ தருவது மிகுந்த புண்ணியத்தை சேர்க்கும்.

நான்காம் நாள் வழிபாடு நம் ஜாதகத்தில் இருக்கும் சூரிய தோஷங்களை நீக்கி நல்வாழ்வு தரும்.