நவராத்திரி - துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு

Maalaimalar

நவராத்திரி விழா என்பது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை போற்றும் ஒன்பது நாட்கள் விழா

பெண் தெய்வமான சக்தியை (அம்பிகையை) ஒன்பது நாட்கள் வழிபடும் விழா

முதல் 3 நாட்கள் - வீரம் மற்றும் துணிவு தரும் துர்க்கையை வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்க வழிபட வேண்டும்

அடுத்த 3 நாட்கள் - செல்வம் மற்றும் அருள் தரும் லட்சுமியை குடும்பத்தில் நிம்மதி, ஐஸ்வர்யம், செல்வம் பெருக வழிபட வேண்டும்.

இறுதி 3 நாட்கள் - கல்வி மற்றும் ஞானம் தரும் சரஸ்வதியை கல்வி, கலை, இசை, ஞானம் பெற வழிபட வேண்டும்.

ஒன்பது நாள் பூஜை வழிபாட்டின்போது அம்பிகைக்கு உகந்த மலர்களையும் நைவேத்தியங்களையும் வைத்து வழிபட வேண்டும்.

பத்தாம் நாளான விஜயதசமி நாளில் அன்னை துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் கொண்டாடப்படுகிறது.