பொடுகுத் தொல்லைக்கான இயற்கை தீர்வுகள்

Maalaimalar

வேப்பிலை பேஸ்ட்

வேப்பிலையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். வேம்பின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை நீக்க உதவும்.

வெந்தயப் பேஸ்ட்

இரவில் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி 20–30 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசவும். இது பொடுகைக் கட்டுப்படுத்தி முடிக்குக் குளிர்ச்சி தரும்.

கற்றாழை

புதிய கற்றாழை ஜெல்லை நேரடியாக உச்சந்தலையில் தடவி 15–20 நிமிடங்கள் ஊறவைத்து அலசினால் அரிப்பு மற்றும் எரிச்சல் குறையும்.

டீ ட்ரீ ஆயில்

பயன்படுத்தும் ஷாம்புவில் 2–3 துளிகள் டீ ட்ரீ ஆயில் கலந்து தலைக்குக் குளிப்பது பூஞ்சைத் தொற்றை விரைவாகக் கட்டுப்படுத்தும்.

தயிருடன் எலுமிச்சை சாறு

2 ஸ்பூன் தயிருடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பின் வீரியம் குறைந்த ஷாம்புவால் அலசலாம்.

பொடுகு இருக்கும் போது உச்சந்தலையில் நேரடியாக அதிக எண்ணெய் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.