Maalaimalar
தயிருடன் தக்காளி அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்த்தால் வெயிலில் ஏற்பட்ட கருமை நீங்கும்.
புளித்த அரிசி தண்ணீரை முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வர அவை நீங்கும். கரும்புள்ளிகளும் உடன் மறைந்து போகும்.
அரிசி மாவுடன் காய்ச்சாத பாலை கலந்து தடவி நன்கு காய்ந்த பின் முகம் கழுவிட, இறந்த செல்கள் நீங்கி புதுப்பொலிவு தரும்.
ஆரஞ்சு பழத்தோலை உலர்த்தி பொடியாக்கி பாலுடன் கலந்து முகத்தில் பூசிடலாம்.
உடனடியாக முகம் பொலிவுற பச்சை பயிரை நன்கு அரைத்து பூசுங்கள். முகம் குளிச்சியாகவும் இறப்பதமுடனும் இருக்கும்.
தக்காளியை நன்கு அரைத்து பூசிட தக்காளியின் தோல் போல் சருமம் பளபளவென இருக்கும்.