கோடை காலத்திற்கு ஏற்ற இயற்கை பானங்கள்: வீட்டிலேயே ஈசியா தயாரிக்கலாம்

Rebecca

கோடை காலம் என்றாலே வெயிலின் உக்கிரத்தால் வெளியே செல்வதற்கே யோசிக்கிறோம். வீட்டில் இருந்தால்கூட சூட்டை தணிப்பதற்காக பல்வேறு பானங்களை அருந்துகிறோம்.
இந்த பானங்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களாக இல்லாமல், இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பானமாக இருந்தால் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
இவ்வாறு கோடை காலத்தில் அருந்தவேண்டிய பானங்கள், அவற்றை தயாரிக்கும் முறைகள் மற்றும் அதன் பலன்களை பார்ப்போம்.
நன்னாரி- 100 கிராம், சர்க்கரை- 500 கிராம், தண்ணீர் ஐந்து கப், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு. நன்னாரி வேர்களை நன்கு சுத்தம் செய்து இயந்திரத்தில் கொடுத்து பொடித்து வர வேண்டும். பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.
வடிகட்டிய நன்னாரி தண்ணீரில் சர்க்கரை, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி எடுக்க வேண்டும். தேவையான வேளைகளில் இந்த நன்னாரி சர்பத்தில் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும். இதை செய்வதற்கு கடினமாக இருந்தால் கடைகளில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தை வாங்கி பயன்படுத்தலாம். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், சிறுநீர் நன்றாக பிரியும்.
ஆரோக்கியமான பானங்களில் பதநீர் இன்றியமையாத இயற்கை பானம். இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளது. இது எலும்புக்கு நல்ல பலத்தை தரும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
தயிருடன் நீர் சேர்த்து நன்றாக ஆற்றி வெண்ணையை வடிகட்ட வேண்டும். இந்த நீர் மோரில் இஞ்சி, புதினா, மிளகாய்க்கு பதிலாக சிறிதளவு மிளகுத்தூள், வறுத்த பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல செரிமானம் உண்டாகும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீர் நன்றாக பிரியும்.
கோடை காலம் வந்து விட்டாலே இளநீருக்கு சற்று மவுசு அதிகம் தான். இளநீரில் பொட்டாசியம் சத்து இருப்பதால் கோடை காலத்தில் வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் சோர்வை நீக்கும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்.
எலுமிச்சை பழச்சாற்றில் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து, புதினா இலை இரண்டு சேர்த்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். இதில் உள்ள வைட்டமின் சி சத்து, சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.
இது கோடை பானத்திற்கு ஏற்ற சிறந்த பானம். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்கும், இதயத் தசைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
செம்பருத்தி இதழ்களை அரைத்து அதனுடன் தண்ணீர் கலந்து தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மணப்பாகு பதம் வந்தவுடன் ஆற வைக்கவும். தேவையான போது சிறிதளவு எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றை கலந்து குடித்தால், கோடை வெயிலின் தாக்கம் தெரியாமல் உற்சாகமாக வைத்திருக்கும்.
சிறிதளவு சீரகம், கொத்தமல்லி எடுத்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும், இது உடலுக்கு குளிர்ச்சியை தரும், பித்தத்தை அகற்றும், உடல் உள் உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories