கோடை காலத்திற்கு ஏற்ற இயற்கை பானங்கள் (Part 2)

Rebecca

குளிர்ந்த தண்ணீர் -1 லிட்டர், வெல்லம்- ஒரு கப், எலுமிச்சம் பழம்- ஒன்று, புளி-ஒரு எலுமிச்சை அளவு, சுக்கு கால் தேக்கரண்டி, ஏலக்காய் 2, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை, மஞ்சள் -ஒரு சிட்டிகை, உப்பு தேவையான அளவு, துளசி இலை புதினா இலை வகைக்கு ஐந்து
முதலில் புளியை தண்ணீரில் கரைத்து அதனுடன் வெல்லத்தையும் கரைக்கவும், பின்னர் எலுமிச்சம் பழச்சாறு , சுக்கு, ஏலக்காய் , மஞ்சள், மிளகு, ஜாதிக்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கரைத்து வடிகட்டவும், அதனுடன் மணத்திற்காக புதினா இலை, துளசி இலையை போடவும், இப்போது சுவையான பானகம் தயார். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
வில்வ பழத்திலிருந்து சாறு எடுத்து அதனுடன் நாட்டு வெல்லம் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து மணப்பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவையானபோது ஐந்து முதல் பத்து மில்லி அளவு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும்.
இது வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற பானமாகும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். குடல் புண்களை குணப்படுத்தும்.
கோடை காலத்தின் வரப்பிரசாதமான தர்பூசணி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது தர்பூசணி பழத்தின் சாற்றை குடிக்கலாம். இது தாகத்தை தணிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை தரும், சிறுநீர் பெருக்கி செய்கையும் இதற்கு உண்டு.
தயிர், சர்க்கரை கொண்டு தயாரிக்கும் இந்த பானம் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. இதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்றவை கிடைக்கிறது.
கரும்புச் சாறுடன், சிறிதளவு இஞ்சி, எலுமிச்சை சேர்த்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி, சீரணம் தரும். உடல் சூடு, பித்தத்தை தணிக்கும், காமாலை நோயாளிகளுக்கு நல்லது.
பார்லியை தண்ணீரில் நன்றாக கொதிக்க விட்டு, ஆற வைத்து குடிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களில் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கும், சிறுநீரக கற்களை வெளியேற்றும். சிறுநீர் பெருக்கி செய்கை இதற்கு உண்டு.
கோடை காலத்திற்கேற்ற சிறந்த பானம் முலாம்பழச்சாறு. இப்பழத்தில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. இது உடலின் தேவையற்ற கழிவுகளை அகற்றும். ஆரோக்கியமான சருமத்தை உருவாக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும், சிறுநீர் கடுப்பு நீங்கும்.