காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத தவறுகள்!

Maalaimalar

காலை கண் விழித்தவுடன் போன் பார்ப்பது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தரும். இது நாள் முழுவதையும் மன அழுத்தத்துடன் தொடங்க வழிவகுத்துவிடும்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டி, செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும்.

காலையில் எழுந்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீரிழப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்தும்.

காலை உணவைத் தவிர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கி, நாள் முழுவதும் ஆற்றல் குறைந்து காணப்பட வழிவகுக்கும்.

காலையில் உடற்பயிற்சியைத் தவிர்ப்பது சோம்பலை அதிகரிப்பதுடன், ரத்த ஓட்டத்தைச் சீராக இருக்க விடாமல் தடுத்துவிடும்.

காலை வேளையில் தேவையற்ற டென்ஷன்கள், கவலைப்படுவது மனநலத்தைப் பாதித்து ஒட்டுமொத்த நாளையும் கெடுத்துவிடும்.

காலையில் சூரிய ஒளியில் வெளிவராமல் இருப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்காமல் போவதுடன், உடல் இயற்கையான விழிப்புணர்வைப் பெற தாமதமாகும்.

காலையில் நேரமின்மை காரணமாக எல்லாவற்றையும் பதற்றத்துடனும் அவசரமாகவும் செய்வது மன அழுத்தத்தை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.