படத்துக்கு யார்தான் ஹீரோ? - கூல் சுரேஷுக்கும் விபூதி அடித்த மஞ்சள் வீரன் இயக்குனர்
Santhya
செல் அம் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் துவங்கியதாக சொல்லப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்பட்டார்.
'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிஎப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.
இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ கூல் சுரேஷ் இல்லை. கூல் சுரேஷ்க்கும் மஞ்சள் வீரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
நவம்பர் அல்லது டிசம்பர் மாத இறூதியில் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனையும் , படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகப்படுத்துவேன் என இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார்.