நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Maalaimalar

நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.

நெல்லிக்காய் சாற்றுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து காலையில் குடித்து வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி சருமம் இயற்கையாகவே ஜொலிக்கும்.

நெல்லிக்காய் சாற்றுடன் கொத்தமல்லி தழை அரைத்து சாறு எடுத்து குடித்து வர, உடலில் உள்ள பித்தம் தணிந்து தலைச்சுற்றல் மற்றும் வாந்தி உணர்வு சரியாகும்

நெல்லிக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு படுக்கும் முன் குடித்து வர, காலையில் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் வயிறு சுத்தமாகும்.

நெல்லிக்காய் சாற்றை இளநீருடன் கலந்து குடித்து வர, கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம் மற்றும் நீர் வறட்சி நீங்கும்.

நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி, தேனில் ஊற வைத்து தினமும் ஒரு துண்டு சாப்பிட்டு வர, இரத்த ஓட்டம் சீராகும்.