Maalaimalar
அத்தோ மான் – அத்தோ மான் சென்னையின் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும் . முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் புளிச்சாறு, வறுத்த நூடுல்ஸ் சேர்த்துப் பிசையப்படும் உணவாகும்.சென்னையில் மிகவும் பிரபலம்
கடல் உணவுகள்: பட்டினப்பாக்கம் மெரினா லூப் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமான கடல் உணவு உணவகங்கள் மற்றும் மெஸ்கள் உள்ளன.
மயிலாப்பூரில் மசாலா தோசை மற்றும் பில்டர் காபி கிடைக்கும்
சென்னை சௌகார்பேட்டை : வட இந்திய சாட் வகைகள் (சாட்ஸ்), மும்பை ஸ்டைல் வடா பாவ், முறுக்கு சாண்ட்விச் மற்றும் நெய் ததும்பும் தென்னிந்திய டிபன் ஆகியவற்றிற்கு மிகவும் பிரபலமான இடமாகும்.
இறால் வடை: மண்ணடி பகுதியின் தெருவோர உணவுகளில் மிகவும் பிரபலமான, மொறுமொறுப்பான சிற்றுண்டிகளில் ஒன்று இறால் வடை.
மாலை, இஃப்தார் நேரங்களிலும் மண்ணடி தெருக்களில் சுடச்சுடப் பொரிக்கப்படும் இந்த வடைக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
சைதாப்பேட்டை வடகறி: இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான பாரம்பரிய தென்னிந்திய சைடிஷ் ஆகும்