சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம் வாங்க...

undefined

சப்பாத்தி, முட்டை-4 பெரிய வெங்காயம்-3 தக்காளி-3
இஞ்சி- சிறிது பூண்டு- சிறிது மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
முதலில் முட்டையை பொரித்து எடுத்துவைக்கவும். பிறகு சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.
கடாயை சூடுசெய்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து குறைவான தணலில் மூடிவைக்கவும்.
பச்சை வாடை போனவுடன், வெட்டி வைத்த சப்பாத்தி, முட்டைப் பொரியல் போட்டு, மிளகுத் தூள், உப்பு இட்டு, கிளறி எடுத்து சுடச்சுட பரிமாறவும்.