Maalaimalar
ஏப்ரல் 23, 1938 அன்று ஆந்திரவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா கிராமத்தில் பிறந்தார். 3 வயது முதலே இசை கற்கத் தொடங்கிய அவர், தனது 9 வது வயதில் முதல் மேடை நிகழ்ச்சியில் பாடினார்.
1957-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான 'விதியின் விளையாட்டு' மூலம் பின்னணிப் பாடகியாகத் திரையுலகில் அறிமுகமானார்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
4 தேசிய விருதுகளையும், 33 மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார்.
1986ல் தமிழ்நாடு அரசின் மிக உயரிய கலைமாமணி விருது, பெற்றார். கர்நாடக ராஜ்யோத்சவா விருது பெற்றுள்ளார். மைசூரு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
2013ல் பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் தனக்கு மிகவும் தாமதமாக வழங்கப்பட்டதாகவும், தென்னிந்தியக் கலைஞர்களுக்கு மத்திய அரசு தகுந்த அங்கீகாரம் அளிப்பதில்லை என்றும் கூறி ஏற்க மறுத்துவிட்டார்.
தனது 88 வயதில் மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11, 2026) காலமானார். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவரின் உடல் இன்று மைசூரு மஹாராஜா கல்லூரியில் வைக்கப்பட்டு, பின் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.