Maalaimalar
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய அன்னை முத்தாரம்மனின் மகா காவியம்!
"ஒரு பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும்" என பிரம்மனிடம் வரம் பெற்றான் மகிஷாசுரன்.
வரம் பெற்ற கர்வத்தால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தான்.
தேவர்களின் துயர் துடைக்க மும்மூர்த்திகளின் கோபக் கனலில் இருந்து அன்னை முத்தாரம்மன் அவதரித்தாள்!
சிவன் தனது திரிசூலத்தையும், விஷ்ணு தனது சக்கரத்தையும் அன்னைக்கு ஆயுதங்களாக வழங்கினர்.
அசுரனை வதம் செய்யப் பதினெட்டு கரங்களுடன், சிம்ம வாகனத்தில் அமர்ந்து போர்க்கோலம் பூண்டாள் அன்னை.
வஞ்சக அசுரப் படைகளைத் துவம்சம் செய்ய, குலசை கடற்கரையே மகா போர்க்களமாக மாறியது.
ஒன்பது நாட்கள் நடந்த போரில் அசுரனின் மாய வித்தைகளைத் தனது ஞானத்தால் முறியடித்தாள் தேவி.
விஜயதசமி நள்ளிரவில், அன்னை முத்தாரம்மன் உக்கிர திரிசூலத்தால் மகிஷாசுரனின் நெஞ்சைப் பிளந்து வதம் செய்தாள்!
அசுரனின் ஆணவம் அடங்கி, பிரபஞ்சத்தில் மீண்டும் தர்மமும் நீதியும் நிலைநாட்டப்பட்டது.
இந்த மகா காவியத்தை நினைவூட்டும் விதமாகவே, பக்தர்கள் காளி, அசுரன் வேடமிட்டு மேள தாளங்கள் முழங்க, கைகளில் தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.