Maalaimalar
யசோதை மற்றும் கோகுலத்து பெண்களின் வீடுகளில் வெண்ணெய் திருடி உண்பது, உரலில் தன்னைத்தானே கட்டிக்கொண்டு மருத மரங்களை முக்தியடையச் செய்த 'தாமோதர லீலை' ஆகியவையாகும்.
கிருஷ்ணரைக் கொல்ல வந்த அரக்கி பூதனையையும் வண்டி வடிவத்தில் வந்த சகடாசுரன் மற்றும் கம்சனால் அனுப்பப்பட்ட பல்வேறு அரக்கர்களையும் அளித்தார். இதனை 'பூதனை மோக்ஷம்' என்று அழைப்பர்.
யமுனை நதியில் விஷத்தைக் கக்கும் காளிங்கன் என்ற பாம்பின் தலை மீது ஏறி நடனமாடி, அதன் கர்வத்தை அடக்கி நதியைப் பரிசுத்தமாக்கிய லீலை.
இந்திரனின் அகந்தையை அடக்க, கோவர்த்தன மலையைத் தனது சிறு விரலால் குடையாகத் தூக்கிப் பிடித்து, கோகுலத்து மக்களைக் பெருமழையிலிருந்து காப்பாற்றிய நிகழ்வு.
கோபியர்களின் தூய அன்பை வெளிப்படுத்தும் விதமாக, யமுனை நதிக்கரையில் புல்லாங்குழல் இசைத்து அவர்களுடன் ராஸ நடனம் ஆடிய தெய்வீக லீலை.
மல்யுத்தத்தில் கம்சனை வதம் செய்து, சிறையிலிருந்த தனது பெற்றோர் தேவகி மற்றும் வாசுதேவரை விடுவித்த வீர லீலை.