பெரும் வரவேற்பை பெற்றுவரும் வீரப்பன் வெப் சீரிஸ்...
Santhya
இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த சீரிஸை சரத் ஜோதி இயக்கியுள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14- ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
வீரப்பனின் பெரும்பாலான கதைகளை போலீஸ் மற்றும் ஊடகங்கள் சொல்ல கேட்டிருப்போம். ஆனால், இந்த சீரிஸில் வீரப்பனே தன் கதையைச் சொல்வதனால் சுவாரஸ்யம் கூடுகிறது.
6 எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸில் சில புனைவுக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் கூட்டுகிறது. இதன் அடுத்த பாகத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.