கீர்த்திசுரேஷின் கிளாசிக் கிளிக்ஸ்...

Maalaimalar

கேரள கிரிக்கெட் லீக் வீரர் ஏலத்திற்கு நடிகை கீர்த்திசுரேஷ் வருகை தந்தார்.

திருவனந்தபுரம் ராயல்ஸ் அணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக, லீக்கின் மூன்றாவது சீசனுக்கான இந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.

தற்போது கேரள கிரிக்கெட் லீக்கில் உள்ள திருவனந்தபுரம் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார் .

மிடுக்கும் கம்பீரத்துடனும் கீர்த்திசுரேஷ்.

முத்து பொத்தான் வேலைப்பாடுகள் மற்றும் நேர்த்தியான வைர வளையக் காதணிகளுடன் கூடிய கம்பீரமான வெள்ளை நிற பேன்ட்சூட்டில் கீர்த்தி சுரேஷ் அசத்தலாக காட்சிதந்தார்.

ஆடையின் வடிவமைப்பிற்கு கச்சிதமாகப் பொருந்தும் எளிமையான வைர வளையக் காதணிகள், வெள்ளிக் கைக்காப்பு மற்றும் கூர்முனை கொண்ட தந்த நிறக் குதிகால் காலணிகள் போன்றவற்றை அணிந்திருந்தார்.