Maalaimalar
நினைவாற்றல் மற்றும் மூளைத் திறனை அதிகரிக்கும். அல்சர் மற்றும் தோலில் ஏற்படும் காயங்களை விரைவாகக் குணப்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகி மனா அழுத்தம் குறையும். துவையல், கூட்டு, சூப், போடி செய்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் இரும்புச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. ரத்த சோகை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தி, உடல் பலத்தை அதிகரிக்கும். பொரியல், மசியல், போண்டாவில் கீரையை நறுக்கி போட்டு பலகாரம் செய்து சாப்பிடலாம்.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி, இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் மற்றும் வைட்டமின் K இதில் உள்ளது. பொரியல் செய்து உன்ன பிடிக்காதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம்.
இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சித் தன்மை குடல், வயிறு மற்றும் வாயில் உள்ள புண்களை மிக வேகமாக குணமாக்கும். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு இக்கீரை நல்ல மருந்தாகும். வத்தக்குழம்பு, சூப், பருப்பு கடையால் செய்து சாப்பிடலாம்.
உடல் சூட்டைத் தணித்து கண் பார்வையைத் தெளிவாக்க உதவும். சிறுநீரகத்தை பெருக்கி சிறுநீரகக் கற்களை நீக்கும். பொரியல், கடையல், தண்டு சாம்பார் வைத்து சாப்பிடலாம்.
"கண்ணுக்குப் பொன்னாங்கண்ணி" என்பது பழமொழி. கண் எரிச்சல், கண் வறட்சி மற்றும் பார்வக் குறைபாடுகளை நீக்கி, கண் ஒளியைத் பிரகாசமாக்கும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும். இதனால் சருமம் பொன்னிறப் பொலிவையும், அழகையும் பெறும்.