உலகப்புகழ் பெற்ற காஷ்மீர் குங்குமப்பூ

Maalaimalar

குங்குமப்பூ உலகின் விலை மதிப்புமிக்க ஒரு தாவர உற்பத்தி பொருளாக உள்ளது. க்ரோகஸ் சடைவஸ் என்ற தாவர பூவின் சிவப்பு நிற சூல்களில் இருந்து பெறப்படும் பொருள் ஆகும்.

குங்குமப்பூவை பல்வேறு வகையான உணவுகள், இனிப்புகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

குங்குமப்பூவில் உள்ள குரசின் என்ற பொருள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு கொண்டுள்ளது.

குங்குமப்பூ மனச்சோர்வுக்கான மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மருந்துகளை பயன்படுத்திய பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றம், வயிற்றுவலி, சோர்வு போன்றவை கணிசமாக குறைந்ததாக கண்டறியப்பட்டது.

குங்குமப்பூவை கர்ப்பிணிகள் உட்கொள்ளும்போது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குங்குமப்பூ தாவரங்கள் உலகில் சில குறிப்பிட்ட குளிர்ச்சியான பகுதிகளில் மட்டுமே நன்றாக விளைகின்றன. குங்குமப்பூ உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே குங்குமப்பூ விளைகிறது.