மாலை மலர்
காராமணி பயறை வாசம் வரும் வரை வறுத்து, ஆறிய பின்னர் கழுவி நன்றாக வேக வைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி விட்டு மீண்டும் காய்ச்சி பாகு பதத்தில் எடுத்துக்கொள்ளவும். வெல்லப் பாகில் காராமணியை போட்டு நன்றாக கிளற வேண்டும்.
நெய்யில் தேங்காய் துருவலை வறுத்து, காராமணியில் போட்டு, ஏலக்காய் தூள் சேர்த்தால் சுவையான காராமணி இனிப்பு சுண்டல் தயார்.
காராமணி இனிப்பு சுண்டல் சுவையும் சத்தும் நிறைந்த சிற்றுண்டி. கோடை விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளுக்கு மாலை நேர உணவுக்கு ஏற்றது.