Maalaimalar
ஆண்டுதோறும் IBPS- வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் மூலமாக வங்கியில் பணியாற்ற பயிற்சி அலுவலர்கள் (அ) மேலாண்மைப் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சி அலுவலர்/ மேலாண்மைப் பயிற்சியாளர் தேர்விற்கான மொத்த பணியிடங்கள்- 6715.
21.07.2026 அன்றுள்ள நிலவரப்படி, ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 02.07.1996-க்கு முன்னதாகவும், 01.07.2006-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.
* மொத்த சம்பளம் – ரூ.88,000 – 92,000.
* முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய முறைகளில் இத்தேர்வு நடைபெறும்.
* SC, ST, PWD- ரூ. 175.
* இதர விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
* பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
தகுதியுள்ளோர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை படித்துவிட்டு, IBPS – வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தின் https://www.ibps.in/ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
01.07.2026 முதல் 21.07.2026 வரை விண்ணப்பிக்கலாம். பதிவு முடிந்த பிறகு 2 நாட்களுக்குள் விண்ணப்பத்தைத் திருத்திக்கொள்ளலாம்.
* இணையவழித் தேர்வு – முதல்நிலைத் தேர்வு: ஆகஸ்ட், 2026.
* இணையவழித் தேர்வு – முதற்கட்டத் தேர்வு முடிவு: செப்டம்பர், 2026.
* நேர்காணல் நடைபெறும் நாள்: நவம்பர்/ டிசம்பர், 2026.
விண்ணப்பதாரர்கள் மேலும் அறிந்து கொள்ள IBPS-ன் அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.