ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடக்கம்.. புது போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Rebecca
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக படக்குழு அறிவித்து வந்தது.
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்தப் படம் தொடர்பாக புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்--->
https://www.maalaimalar.com/web-stories