வெயில் காலத்திற்கு ஏற்ற Blouse Designs! அப்படி என்ன Special..?

Maalaimalar

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு புடவையின் தோற்றம் பெரும்பாலும் அதன் பிளவுஸ் டிசைன்ஸ் பொறுத்தே அமைகிறது. இதனால் பிளவுஸ்-காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர்.

விதவிதமான டிசைன்களில் தைக்கப்படும் பிளவுசை கோடை காலத்தில் அணிகிறார்களா? என்றால் இல்லை என்பதே உண்மை.

கோடை காலத்திற்கு அணியும் விதமாகவும் அதிலே பல டிசைன்களை கொண்டும் பிளவுஸ்களை தைக்கலாம்.

டோரி ஸ்லீவ்ஸ்:

டோரி ஸ்லீவ்ஸ் டிசைன்ஸ் கோடை காலத்திற்கு மிகவும் பொருத்தமானவை. இவை அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக அமையும்.

பஃப் ஸ்லீவ்ஸ்:

கோடை காலத்தில் தினசரி அணிவதற்கு இது மிகவும் பொருத்தமானது. இதில் உள்ள அழகான லேஸ் வேலைப்பாடு, எளிமையான ஸ்லீவ்ஸ்களுக்கு ஒரு நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது. தினசரி அணிவதற்கோ அல்லது ஒரு விசேஷ நிகழ்விற்கோ, இந்த பேட்டர்னை நீங்கள் எந்தப் புடவையுடனும் தைத்துக் கொள்ளலாம்.

பூ வடிவ பிளவுஸ் ஸ்லீவ்கள்

இது அழகாகவும் நேர்த்தியாகவும் தோற்றமளிப்பதுடன், அணிவதற்கும் மிகவும் வசதியானது. எளிமையான, அன்றாடப் புடவைகளுக்கு ஒரு பகட்டான அழகைச் சேர்க்க, இது போன்ற பிளவுஸ்கள் மிகவும் பொருத்தமானவை.

இலை வடிவ பிளவுஸ் கை டிசைன்ஸ்

இலை வடிவ பிளவுஸ் கைகளுக்கு மிகவும் நேர்த்தியாக உள்ளன. இவற்றில் பொருத்தமான மணிகள் மற்றும் அழகான வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளதால், இவை உங்கள் விசேஷமான புடவைக்கு மிகவும் பொருத்தமானவை. இது போன்ற வடிவமைப்புகள் மிகவும் அழகாக இருப்பதுடன், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.