திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களால் MADDY என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன்.சமீபத்திய பேட்டியில் தனக்கு போட்டி ’இவர் தான்’ என மாதவன் கூறியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது..அந்த பேட்டியில் “I am not good at carrying baggage, nor am I good at carrying lies" பொய்களை சுமப்பதில் நான் வல்லவன் கிடையாது..என்னை விட இளையவர்களிடம் நான் போட்டியிடவில்லை..எனது சொந்த திறமையுடனும், எனக்குள் உள்ள திறமையை வெளிப்படுத்தும் திறனுடனும் தான் போட்டியிடுகிறேன்..”எனக்கு நான் தான் போட்டி” முதலில் ‘நான் யார்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனநிலை என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.