முளைக்கட்டிய காய்கறிகள் சாப்பிட்டா ஆபத்தாகிடும்? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Rebecca

பொதுவாகவே முளைகட்டிய உணவுகள் ஆரோக்கியமான மற்றும் சக்திவாய்ந்த உணவுப் பொருட்களாக நினைப்போம். ஏனென்றால் இந்த உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நொதிகள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும்.
முளைகட்டிய உணவுகள் செரிமானத்திற்கு உதவும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் நொதிகள் நிறைந்தவையாக, கலோரிகள் குறைவாக மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்தவையாக இருக்கும். இந்த உணவுகளை உட்கொள்வது எடை இழப்புக்கு உதவும்.
ஆனால் இப்படி முளைக்கட்டிய அனைத்து உணவுகளுமே பாதுகாப்பானதா என்றால், நிச்சயம் இல்லை. அதுவும் சில வகையான காய்கறிகளை முளைக்கட்ட வைத்து உண்பது மிகவும் ஆபத்தானது என்பது தெரியுமா?
சில சமயங்களில் வீட்டில் அதிகமாக வாங்கி வைக்கும் வெங்காயம் முளைக்கட்ட தொடங்கியிருப்பதைக் காணலாம். முளைக்கட்டிய வெங்காயமானது அதிகளவு ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்கிறது. குறிப்பாக N-புரோபில் டைசல்பைடை உற்பத்தி செய்யும்.
இது இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்தி ஹீமோலிடிக் இரத்த சோகையை ஏற்படுத்தும். மேலும் இப்படிப்பட்ட வெங்காயத்தை உட்கொண்டால், அது குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
பூண்டும் அன்றாட வாழ்வில் நாம் சேர்த்து கொள்ளும் முக்கியமான உணவுகளில் ஒன்று. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை அதிகளவு சேகரித்து வைத்து பின்பு அதில் முளைக்கட்டினால் சாப்பிடக்கூடாது. வெங்காயத்தைப் போன்றே பூண்டிலும் அதிகளவு சல்பர் உள்ளன. இது ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்கிறது.
இப்படி முளைத்த பூண்டு பற்களை உட்கொண்டால், அது இரைப்பை குடல் தொந்தரவு மற்றும் இரத்த சிவப்பணுக்களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தும். எனவே நல்ல பூண்டு என்றால், அது முளைக்காதது தான். எனவே முளைத்த பூண்டு பற்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் உருளைக்கிழங்கு வாங்கி வைத்து, நீண்ட நாட்களாகிவிட்டால், அவை முளைத்திருப்பதைக் காணலாம். அப்படி முளைத்த உருளைக்கிழங்கில் உள்ள முளைத்ததை நிறைய பேர் தூக்கி எறிந்துவிட்டு சமைப்பார்கள்.
ஆனால் முளைத்த உருளைக்கிழங்கு அவ்வளவு நல்லதல்ல. இத்தகைய உருளைக்கிழங்கில் கிளைகோல்கலாய்டுகள் உள்ளன. இப்படி முளைத்த உருளைக்கிழங்கை உட்கொண்டால், அது சோலனைன் பாய்சனுக்கு வழிவகுத்து, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் உண்டாக்கும்.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories