மாலை மலர்
இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 30 முறை மோதியுள்ளன. இதில் 20 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 10 முறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அதிகபட்சமாக 278 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 208 ரன்னாகும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 113 ஆகும். கொல்கத்தா நைட் டைர்ஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 101 ஆகும்.
டேவிட் வார்னர் 59 பந்தில் 126 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கவுதம் கம்பீர் 60 பந்தில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடித்துள்ளார்.
டேவிட் வார்னர் 15 போட்டிகளில் 619 ரன்கள் குவித்துள்ளார்.
நிதிஷ் ராணா 14 போட்டிகளில் 492 ரன்கள் சேர்த்துள்ளார்.
அந்த்ரே ரஸல் 20 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
புவனேஷ்வர் குமார் 25 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.