Maalaimalar
காபி முதன்முதலில் 9-ஆம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவில் ஆடு மேய்க்கும் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது
உலகின் முதல் அதிகாரப்பூர்வ காபி ஷாப் 1475-ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 'கிவா ஹான்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, உலகில் மிக அதிகமாக வர்த்தகம் செய்யப்படும் 2-வது பெரிய பொருள் காபி!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் 'உலக காபி தலைநகரம்' என அழைக்கப்படுகிறது.
புனுகுப் பூனையின் எச்சத்தில் இருந்து எடுக்கப்படும் 'கோபி லுவாக்' என்ற காபி தான் உலகின் மிக விலை உயர்ந்த காபி!
தென்னிந்தியாவில் பித்தளை டபரா-செட்டில் ஆற்றித் தரப்படும் 'ஃபில்டர் காபி' உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது!
உலகிலேயே காபியை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பிரேசில்.
17-ஆம் நூற்றாண்டில் பாபா புடான் என்ற துறவி, மெக்காவிலிருந்து 7 காபி விதைகளைத் தனது தாடியில் மறைத்து எடுத்து வந்து கர்நாடகாவின் சிக்மகளூரில் பயிரிட்டார்.
ஒரு காபி செடி சரியாகப் பராமரிக்கப்பட்டால் சுமார் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து தொடர்ந்து காபி பழங்களை தரும்.
பிளாக் காபி குடிப்பதால் Metabolism 3% முதல் 11% வரை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.