Maalaimalar
'பசுமை ரெயில்' திட்டத்தின் மூலம் ஜெர்மனி, ஜப்பான் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் ஹரியானாவில் உள்ள ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே இயக்கப்படுகிறது.
உலக நாடுகளின் ரெயில்கள் 2-3 பெட்டிகளைக் கொண்டிருக்க, இந்தியா 10 பெட்டிகளுடன் 2,600 பயணிகள் செல்லும் வகையில் உருவாக்கபட்டது பெருமைக்குரியது.
டீசலுக்குப் பதிலாக ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வினைபுரிந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், கார்பன் உமிழ்வு இல்லை.
இதில் இருந்து நீராவி மட்டுமே வெளியேறும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
பாதுகாப்பு அம்சங்களும் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆபத்தான நேரத்தில் தானியங்கி முறையில் செயல்பாட்டை நிறுத்தும் அமைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயண துாரத்தை பொறுத்து கட்டணம் 5 ரூபாயில் தொடங்கி, அதிகபட்சமாக 25 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.