கோடையில் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் முக்கிய உணவுகள்

மாலை மலர்

கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் ரத்த அழுத்தத்தில் (Blood Pressure) மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

இதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உடல் வெப்பத்தை சீராக வைத்து, ரத்த அழுத்தத்தை சமநிலையில் பராமரிக்க உதவும் சில முக்கிய உணவு வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்..

தினமும் 3 - 4 லிட்டர் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யுங்கள். இளநீர், மோர், உப்பு சேர்க்காத பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

உணவில் உப்பின் அளவை வெகுவாகக் குறைப்பது மிக அவசியம்.

ஊறுகாய், கருவாடு, அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

வெப்ப காலத்தில் ஜீரணிக்க கடினமான கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

கேழ்வரகு (ராகி) மற்றும் கம்பு போன்றவற்றை கூழாகவோ அல்லது கஞ்சியாகவோ எடுத்துக்கொள்வது உடலைக் குளிர்ச்சியாக வைப்பதோடு, ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்க உதவும்.