Maalaimalar
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இன்று அறிவித்தது
நீட் மறு தேர்வு நாளை இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் 43 மையங்களில் தேர்வு நடக்கிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு கடுமையாக போடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபை நேரலை குறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு எழுதிய கடிதத்தில், ஆளுநர் உரைமீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை. இது மக்கள் பிரதிநிதிகள் குரலை மறைப்பதாகும் என தெரிவித்தார்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் போலீசார் இன்று விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணைக்கு சென்றபோது செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை.
12-வது சர்வதேச யோகாசன தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு யோகாசனங்களை செய்கிறார்.
62-வது பிறந்தநாளை கொண்டாடிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இத்தாலி அரசு கண்டனம் தெரிவித்தது.
ஐபிஎல் 2027-ம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார்.