மட்டன் வறுவலில் உப்பு அதிகமானால் பொட்டுக்கடலை மாவு சிறிதளவு சேர்த்தால் உப்பு சரியாகிவிடும்..தேங்காய் பர்ஃபி செய்யும்போது சிறிதளவு உடைத்த பாதாம் பருப்பு சேர்த்துக்கொண்டால் சுவை அமோகமாக இருக்கும்..எந்த குழம்பாக இருந்தாலும் சரி அதில் துருவிய தேங்காய், கொஞ்சம் கறிவேப்பிலை அரைத்து சேர்த்தால், குழம்பு கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்..பாகற்காய் குழம்பில் உள்ள கசப்பு குறைந்து சுவை கூட, சிறிதளவு வெல்லம், சீரக பொடியை இறுதியாக சேர்த்தால் போதும் சுவை கூடும்..சிக்கன் வறுவல் செய்யும் போது சிறிதளவு துருவிய இஞ்சி சேர்த்தால் சுவை கூடும்..பூரி மிருதுவாக வேண்டும் என்றால் பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு பால் சேர்த்து பிசைய வேண்டும். மிருதுவான பூரி கூடுதல் சுவையில் கிடைக்கும்..Explore