இட்லி- தோசை: உடல் எடையை குறைக்க சிறந்த காலை உணவு எது?

Maalaimalar

இட்லி புரதச்சத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் இல்லை. இருப்பினும் சாம்பாருடன் சேர்த்து உண்ணும்போது புரதம் மற்றும் நார்ச்சத்து கிடைத்துவிடும்.

தோசையில் புரதச்சத்தை அதிகரிக்க அரிசிக்கு மாற்றாக கேழ்வரகு பயன்படுத்தலாம். பாசிப்பருப்பு, பன்னீர், முளைக்கட்டிய பயறுகளை தோசைக்குள் சேர்த்து சுருட்டி சூடாக்கி சுவைக்கலாம். இது தோசையை சமச்சீரான, புரதம் நிறைந்த உணவாக மாற்றும்.

ஒரு சாதாரண இட்லியில் (35 முதல் 50 கிராம்) சுமார் 40 முதல் 50 கலோரிகள் உள்ளன. நீராவியில் வேகவைக்கப்படுவதால் கொழுப்பு குறைவாக உள்ளது. எண்ணெய் இல்லாமலேயே ஊட்டச்சத்துக்கள் தக்க வைக்கப்படுகின்றன.

ஒரு சாதாரண தோசையில் (80 முதல் 100 கிராம்) சுமார் 100 முதல் 120 கலோரிகள் உள்ளன. தோசை வார்க்கும்போது எண்ணெய் அல்லது நெய் மாவில் உறிஞ்சப்படுவதால் இந்த கலோரி வித்தியாசம் ஏற்படுகிறது.

குறைந்த கலோரி அளவு, எளிதில் செரிமானமாகும் தன்மை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இட்லியே காலை நேர சிறந்த உணவாக அமைந்திருக்கிறது.