நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில்பாலிஷை எப்படி அகற்றுவது?

undefined

நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்ற ஹேன்ட் சானிடைஷர் பயன்படுத்தலாம். சிறிய துண்டு பஞ்சில் ஹேன்ட் சானிடைஷரை ஊற்றி நகங்களை துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதில் நீங்கிவிடும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன்4 சொட்டு வினிகர் கலந்து கொள்ள வேண்டும். இதனை கை விரல் நகங்களில் தடவி 5 நிமிடங்களுக்கு பின்னர் பஞ்சினால் துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதாக அழிந்துவிடும்.
சூடான நீரில் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்க வேண்டும். இந்த நீரில் 5-ல் இருந்து 10 நிமிடங்கள் நகங்கள் நனையும்படி வைக்க வேண்டும். அதன்பிறகு நகங்களில் உள்ள நெயில் பாலிஷை எளிதாக அகற்றிவிடலாம்.
டூத் பேஸ்ட்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து பிரஸ்சின் உதவியுடன் நகங்களில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதை அப்படியே 5 நிமிடங்களுக்கு காய வைத்து கழுவினால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும்.
சிறிது பெர்ஃபியூமை காட்டனில் தெளித்து நகங்களை துடைக்கலாம். 3 முதல் 5 நிமிடங்களுக்கு இப்படி செய்வதால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும். ஒவ்வாமை இருந்தால் இதனை தவிர்த்துவிடலாம்.