கருவளையத்தை நீக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

Rebecca

தேன், பால் மற்றும் எலுமிச்சை ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்குவதில் மிகவும் பயனுள்ளது. இதற்கு ஒரு ஸ்பூன் பாலில் அரை ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்யவும்.
உருளைக்கிழங்கு சாறு கருவளையங்களை நீக்கவும் உதவும். இதற்கு முதலில் உருளைக்கிழங்கை அரைத்து அதன்சாறு எடுத்து, பஞ்சில் தோய்த்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
தக்காளி ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளது. கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, முதலில் 2 ஸ்பூன் தக்காளி சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி இந்த பேஸ்ட்டை கண்களின் கீழ் 10 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
முதலில் வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்க வேண்டும். அதன் பிறகு, 10 நிமிடங்கள் கண்களில் வைத்திருக்க வேண்டும். இதனால் கருவளையம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.