கருவளையத்தை நீக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!
undefined
பால் மற்றும் ரோஸ் வாட்டர் கருவளையங்களை நீக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ரோஸ் வாட்டர், பால் சம அளவு எடுத்து பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவவும்.
ஒரு ஸ்பூன் பாலில் அரை ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையங்களை போக்கலாம்.
உருளைக்கிழங்கை அரைத்து அதன்சாறு எடுத்து, பஞ்சில் தோய்த்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் விட்டு விடுங்கள். அதன் பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2 ஸ்பூன் தக்காளி சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களின் கீழ் 10 நிமிடங்கள் தடவவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனை நீங்கும்.
வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்க வேண்டும். அதன் பிறகு, 10 நிமிடங்கள் கண்களில் வைத்திருக்க வேண்டும். இதனால் கருவளையம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.