அநீதியை அழித்து தெய்வங்களுடன் இரண்டறக் கலந்த ஆயுதங்கள்...

Maalaimalar

திரிசூலம்

இது சிவபெருமானின் ஆயுதமாகும். இச்சா, கிரியா, ஞானம் என்னும் முப்படைகளைக் குறிக்கும். பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை இதற்கு உண்டு என்று புராணங்கள் கூறும். சக்தியின் முதன்மை ஆயுதமாகவும் இந்த சூலம் விளங்குகிறது.

சுதர்சன சக்கரம்

இது மகா விஷ்ணுவின் ஆயுதமாகும். தீமைகளை அழிக்கும் காலச்சக்கரமாக விளங்குகிறது. எப்போதும் விஷ்ணுவின் கரங்களில் சுழன்றபடியே இருப்பதால், கால ஓட்டம் சமநிலையில் இயங்குகிறது.

வேல்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஆயுதமாகும். இது ஞானத்தின் கூர்மையைக் குறிக்கும் சக்திவாய்ந்த படைக்கலம். "முருகன் என்றால் வேல், வேல் என்றால் முருகன்" எனும் சிறப்பிற்கு உரியது.

வில்

போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் ஒன்று. விஷ்ணுவின் அவதாரமான ராமனின் கைகளில் நித்தமும் இருக்கக்கூடிய ஆயுதமாக வில் விளங்குகிறது. கோதண்டம் என்று இதனை அழைப்பர்.

வீரவாள்

அசுரர்களை அழிக்கும் உக்கிரமான ஆயுதமாகும். காளி, துர்கை இருவரின் முதன்மை ஆயுதமாகும்.

பாசம் & அங்குசம்

விநாயாகப்பெருமானின் ஆயுதமாகும். பேராசை, கோபம், உலகப்பற்று போன்ற எண்ணங்களை அடக்கி நல்வழிப்படுத்த உதவுவதாகும்.

பரசு (அ ) கோடாரி

பரசு என்றாலே அது பரசுராமரைக் குறிக்கும். எப்போதும் அவரின் கையில் இருக்கக்கூடிய ஆயுதமாகும். கோடரி எனவும் இதைக்கூறவர்.