அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது..அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக தமிழகத்தைச் சார்ந்தவரும், நடிகையுமான ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றுள்ளார்..2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தி பிக்பாஸ் சீசன் 1 முதல் இதுவரை நடந்த எந்தவொரு சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்தவர் பங்கேற்றது இல்லை..ஆனால் அப்பிம்பத்தை உடைத்து ஒரு தமிழ் நடிகை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.