உளுந்தின் உன்னத சத்துக்கள்...

Maalaimalar

புரதச்சத்து

தசைகளின் வளர்ச்சிக்கும் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கவும், உடல் பலத்தை அதிகரிக்கவும் உளுந்து உதவுகிறது.

தாதுக்கள்

உளுந்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளையும், மூட்டுகளையும் மற்றும் பற்களையும் பலப்படுத்த பெரிதும் உதவுகின்றன. 

இரும்புச்சத்து

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை வராமல் தடுக்கிறது.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கவும், இதயத்தின் தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும் இவை உதவுகின்றன.

நார்ச்சத்து

குடல் இயக்கத்தைச் சீராக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இடுப்பு எலும்பு வலுபெற

இடுப்பு வலி மற்றும் உடல் வலியைப் போக்க உளுந்து களி அல்லது உளுந்தங்கஞ்சி செய்து சாப்பிடுவது நலம் பாயக்கும்.